நடிகர் விஜய் மகன் சஞ்சய் பெயரில் நடந்த மோசடி..!வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
2403
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் நடிகர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர்.

-விளம்பரம்-

Vijay family

- Advertisement -

இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் “நான் அடிச்சா தாங்கமாட்ட” என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலித்துள்ளார்.அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்று கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த சஞ்சய், எனக்கு அப்பா (விஜய்), விஜய்சேதுபதி மற்றும் அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அஜித் அங்கள் செய்யும் பிரியாணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். என்றும் பதிலளித்திருந்தார்.

-விளம்பரம்-

அதே போல நான் இன்ஸ்டகிராம் பயன்படுத்துவது என்னுடைய அப்பாவிற்கு தெரியாது அதனால் யாரும் சொல்லாதீர்கள் என்றும் சஞ்சய் குறிப்பிட்டதாக சில செய்திகள் வளம் வந்தன. ஆனால், சஞ்சய் பெயரில் இருக்கும் இன்ஸ்டாகிராம் கணக்கு போலியானது என்று தற்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பிரபல திரைப்பட பி ஆர் ஓ-வான ரியாஸ் அகமத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் மகன் சஞ்சயுடன் உரையாடியதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் விஜய் பிள்ளைகளான ஷாவிற்கும் சஞ்சைக்கும் சமூக வளைத்தளத்தில் எந்த ஒரு கணக்கும் இல்லை. எனவே, விஜய் ரசிகர்கள் யாரும் அந்த போலி கணக்குகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement