விஜய் பேசிய குட்டி கதையும் காப்பியா.! விடியோவை பகிர்ந்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

0
1298
vijay
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி விஜய்’.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.மேலும்,பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும் இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படமான ‘பிகில்’ ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது.

-விளம்பரம்-
vijay

இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அது அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்டமாகவும், அதிக பட்ஜெட் செலவிலும் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. இதற்காக விஜய் ரசிகர்கள் ‘தளபதி63’ என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பிகில் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும்.

இதையும் பாருங்க : பிசுதா யாகோ ? ஷெரீனை சிங்களத்தில் திட்டிய தர்ஷன்.! அப்படினா என்ன தெரியுமா.!

- Advertisement -

அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது.இந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் பேசிய வார்த்தைகள் அதிமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்தது போல இருந்தது.மேலும் நடிகர் விஜய் அவர்கள் திகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஒரு குட்டி கதை சொல்லி இருந்தார் அதில் சிறுவன் ஒருவன் பூக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென்று அவனை பட்டாசு கடையில் வேலை செய்யுமாறு கூறினார்கள்.அவன் தான் என்ன செய்வதென்று அறியாமல் பூக்கடையில் பூக்களுக்கு தண்ணீர் தெளித்தது போல,பட்டாசுன் மீது தண்ணீர் தெளித்து மொத்த வியாபாரமும் கெடுத்தான் என விஜய் அவர்கள் கூறினார்.

அட்லி மகாபிரபு,இதைகூட நீங்க விட்டுவைக்கலையா?

Ramesh Honey Kumar ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 25, 2019

இந்த குட்டி கதையை ஏற்கனவே மேடையில் ஒருவர் பேசி உள்ளார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,விஜய் அவர்கள் காப்பியடித்து தான் இந்த கதையை பேசினார் என கூறுகின்றனர். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் குட்டிகதைகள் என்பது மற்றவர்கள் சொல்லியோ, கேட்டதன் மூலம் தான் நாம் பிறருக்கு கூறுவது தானே. அந்த வகையில் யாரும் குட்டி கதைகளை நாம் படிச்சது, கேட்டது வைத்து தான் சொல்வார்களே தவிர நான் எழுதினது என குட்டி கதையை சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement