சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான் ஆனா, தளபதிக்கு அர்த்தம் தெரியும்ல – சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

0
379
- Advertisement -

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருக்கும் விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்து வருகிறது.

-விளம்பரம்-
https://twitter.com/master__tk/status/1719767634005066069?s=48

இந்த படம் 12 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட அவரது படங்கலின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு தான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறும் குட்டி ஸ்டோரி தான் இந்த விழாவில் ஹைலைட்டாக அமையும் அந்த வகையில் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருந்ததால் லியோ படத்தின் இசை நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது. மேலும், விழா நடைபெறுவதர்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.

https://twitter.com/dhivakar_25/status/1719769026686271928?s=48

ஆனால், அதிகப்படியான பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பை மனதில் கொண்டும் ரத்தாகி இருக்கிறது என்று படக்குழு அறிவித்து இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த விழாவில் பேசிய விஜய்’ ரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க.அந்த காட்டுல காக்க கழுகு (என்று சொன்னதும் ஒரு நொடி சிரிப்பை அடக்க முடியாமல் மைக்கில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்றார். உடனே அரங்கத்தில் சில நொடிகள் கைதட்டலும், சத்தமும் கிழிந்தது ) காட்டுன்னா இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!. அது மாதிரி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில் அம்பு. இன்னொரு நபர் ஈட்டி, வேல் வச்சுருக்கிறவர் முயலை குறி வைக்கிறார். இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார்.

இதுல யார் மாஸ் தெரியுமா.. யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்குக் கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரித்தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். ஆசைகள் கனவுகள் இதுல என்ன தவறு’ என்று பேசி இருந்தார். மேலும் பேசிய விஜய் ” புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்…தளபதிக்கு அர்த்தம் தெரியுமா… நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி

Advertisement