‘எவ்ளோ உயர பறந்தாலும்’ – லியோ மேடையில் மறைமுகமாக தாக்கப்பட்ட ரஜினி. கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்.

0
445
- Advertisement -

லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ரத்னகுமார் பேசி இருக்கும் விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். ஆனால், இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருந்தது.

-விளம்பரம்-

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்து வருகிறது. இந்த படம் வெளியானதில் இருந்தே இந்த படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பரப்பாக இருந்து வந்தது. அந்த வகையில் லியோ திரைப்படம் 12 நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை லியோ திரைப்படம் முறியடித்து இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி உற்சாகத்தை கொடுத்தது. இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் பேசிய இயக்குனர் ரத்னகுமார் ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்த தான் ஆக வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, காகம் எப்பவும் கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவும் அமைதியாக தான் இருக்கும். கழுகு பறக்கும் போது தான் அதை பார்த்து காக்கவும் உயரமா பறக்க நினைக்கும். ஆனால், காக்காவால் அது முடியாது.

-விளம்பரம்-

கழுகு தன்னுடைய இறக்கையை கூட்டி ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்துக்கு பறந்து போய்விடும். உலகின் உன்னதமான மொழி மௌனம் தான். நான் காக்கா, கழுகு என்று சொன்னவுடனே இவரைத்தான் சொல்கிறேன் என்று சோசியல் மீடியாவில் சொல்வார்கள். இங்கு குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயுமில்லை, இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம் வேலையை பார்த்துக் கொண்டு நேரா போய்ட்டு இருக்கணும் என்று பயங்கரமாக பேசி இருந்தார்.

ரஜினிகாந்த் பேசியதற்கு காரணம் ஜெயிலர் படத்தின் பாடல்கள் விஜய் தாக்கி பேசி இருந்தது என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கூறிந்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ரஜினிகாந்தின் பேச்சு இருந்ததாக தற்போது ரசிகர்கள் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் தான் லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், ஒரு கழுகுடன் ‘எப்புட்றா இருக்க’ என்று பேசும் காட்சி இடம்பெற்று இருந்தது.

இந்த வசனத்தை தொடர்ந்து ட்விட்டரில் ‘எப்புட்றா இருக்க’ என்ற ஹேஷ் டேக் வைரலானது. மேலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் இந்த காட்சி வைக்கப்பட்டு இருந்தது என்றும் கூறப்பட்டது. ஆனால், ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே இந்த காட்சி படமாகப்பட்டதாக லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் கூறி இருந்தார்.

இப்படி ரஜினி மற்றும் விஜய்க்கு எந்த ஒரு சர்ச்சை இல்லை என்றாலும் விஜய், ரஜினி ரசிகர்கள் இன்னமும் ட்விட்டரில் சண்டை போட்டுகொண்டு தான் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசிய இந்த பேச்சு வைரலாக பரவி வர இது ரஜினியை குறிப்பிட்டு சொன்னதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.இதனால் மீண்டும் ட்விட்டரில் ரஜினி – விஜய் ரசிகர்களின் மோதல் துவங்கி இருக்கிறது.

Advertisement