‘சாதனை படைத்த நண்பா,நண்பிகளே’ – மாணவர்கள் முன் பேசிய தளபதி விஜய், இதோ முழு வீடியோ.

0
2321
Vijay
- Advertisement -

விஜய் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

-விளம்பரம்-

இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்து இருந்தது எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

விஜய் அரசியல்:

விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். அதோடு விஜய் அரசியல் வருவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கரின் சிலைக்கு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதை விஜய் மக்கள் இயக்கத்தினரும் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் மக்கள் இயக்கம் செய்யும் சமூக சேவை:

இந்நிலையில், பத்து மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து மதிப்பெண் கல்வி உதவித்தொகைய நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இது ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்ட்ரலில் நடைபெற இருக்கிறது.

விஜய் வைத்த கோரிக்கை:

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பொதுவெளியில் பேனர், கட்டவுட்டுகள் வைக்கக்கூடாது என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் அன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என ஐந்தாயிரம் பேருக்கு காலை மற்றும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள் முன் பேசிய விஜய் :

இதனை அடுத்து விஜய் கூறி இருக்கும் அறிக்கையையும் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கும் தெரிவித்திருக்கிறார். இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வருகை தரத்தொடங்கினர். விஜய் 11 மணி அளவில் மண்டபத்திற்கு நுழைந்தார், மேலும், பொது தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் முன் விஜய் பேசிய வீடியோயும் தற்போது வெளியாகி இருக்கிறது.

Advertisement