10 மணி நேரத்திற்கு மேல் நடந்த பரிசளிப்பு விழா- சோர்ந்து போய் மேசையை பிடித்த நின்ற விஜய்-வைரலாகும் வீடியோ

0
2129
- Advertisement -

பரிசளிப்பு விழாவில் கலைப்பாகி விஜய் மேசையை தாங்கி பிடித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

அதோடு 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

மேடையில் விஜய் பேசியது:

நேற்றே காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வந்தார்கள். மேலும், அரசியல் மேடை போல் தயாராகி இருக்கும் இந்த விழாவில் விஜய்யின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விழாவில் விஜய் அவர்கள் கூறியிருந்தது, நீங்கள் தான் அடுத்த வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நம் கண்ணையே குத்துவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அரசியல் குறித்து விஜய் சொன்னது:

நாமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் எதைச் சொல்கிறேன் என்றால் காசு வாங்கி ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும். ஒரு ஓட்டுக்காக ஆயிரம் ரூபாய் என்று ஒரு அரை லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் மொத்தம் 15 கோடி செலவாகிறது. இவ்ளோ கோடி ஒருத்தர் செலவு செய்தால் அதற்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதித்து வைத்திருப்பார். இதையெல்லாம் யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் காசு வாங்கி ஓட்டு போடக்கூடாது என்று சொல்ல வேண்டும். உங்களால் மட்டும் தான் இதை மாற்ற முடியும் என்று பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

மேடையில் சேர்ந்து போன விஜய்:

மேலும், மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். இப்படி காலை 11 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கி இருக்கிறது. 1500 பள்ளி மாணவர்களுக்கு விஜய் விருது வழங்கி சால்வை அணிந்து இருக்கிறார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இதனால் நடிகர் விஜய் சோர்ந்து போய் மேசையில் சாய்ந்து கொண்டிருக்கின்றார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement