குஷி, திருப்பாச்சி, போக்கிரி, காவலன் போன்ற விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களின் கன்னட ஹீரோக்கள் இவங்க தான்.

0
53541
pokiri
- Advertisement -

பொதுவாகவே திரையுலகில் ஒரு மொழியில் வெளி வரும் திரைப்படம் மெகா ஹிட்டாகினால், அந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும். இது எல்லா மொழியிலும் நடந்து வருகிறது. அதுவும் வாங்கவிருக்கும் படம் அந்த மொழியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலோ அல்லது மிக வித்தியாசமான கதைக் களம் கொண்ட படமாக இருந்தாலோ, அதன் ரீமேக் ரைட்ஸை வாங்க பல நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுவார்கள்.

-விளம்பரம்-

அப்படி பலத்த போட்டி இருக்கும் போது, அந்த ஒரிஜினல் படத்தின் ரீமேக் ரைட்ஸின் விலையும் கூடுதலாக சொல்லி விற்கப்படும். இந்த மாதிரி சம்பவங்கள் பல நம் திரையுலகில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு செய்தி என்னவென்றால் தமிழ் திரையுலகில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டான ‘தளபதி’ விஜய் படங்கள், கன்னடத்தில் பெரிய அளவிற்கு மார்க்கெட் இல்லாத நடிகர்களே நடித்து வெளி வந்திருக்கிறது. அந்த படங்களின் பட்டியல் பின்வருமாறு.

இதையும் பாருங்க : அந்த கிஸ் வீடியோ உங்களுக்கு தான்- ரசிகர்களை குஷியில் அழுத்திய சித்து ஸ்ரேயா.

- Advertisement -

2000-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘குஷி’. எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய், ஜோதிகா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் 2010-ஆம் ஆண்டு ‘ஏனோ ஒன்தாரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. மகேஷ் இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் கணேஷ், ப்ரியாமணி ஜோடியாக நடித்திருந்தனர்.

2005-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘திருப்பாச்சி’. பேரரசு இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய், த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் 2006-ஆம் ஆண்டு ‘தங்கிகாகி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. பி.என்.சத்யா இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் தர்ஷன், பூனம் பாஜ்வா ஜோடியாக நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

2007-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘போக்கிரி’. பிரபு தேவா இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் 2010-ஆம் ஆண்டு ‘பொர்க்கி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. எம்.டி.ஸ்ரீதர் இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் தர்ஷன், பிரணிதா ஜோடியாக நடித்திருந்தனர்.

2011-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘காவலன்’. சித்திக் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் அதே ஆண்டு ‘பாடிகார்ட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இசைய கமா இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் ஜக்கேஷ், டெய்ஷி ஷா ஜோடியாக நடித்திருந்தனர்.

Advertisement