விஜய் பேசிய ‘அசுரன்’ பட வசனம் குறித்து வெற்றிமாறன் கருத்து: என்ன சொன்னார் தெரியுமா?

0
1488
- Advertisement -

விழாவில் அசுரன் பட வசனம் குறித்து விஜய் பேசியதற்கு வெற்றிமாறன் அளித்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

மேடையில் விஜய் பேசியது:

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். பின் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. அதோடு நிகழ்ச்சியில் விஜய் அவர்கள் அரசியல் குறித்தும், தலைவர்கள் குறித்தும் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

வெற்றிமாறன் கொடுத்த பதில்:

இந்நிலையில் நிகழ்ச்சியில் அசுரன் படம் வசனம் குறித்து விஜய் பேசியதற்கு வெற்றிமாறன் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துகினுவானுங்க, ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க, ஆனா படிப்பு மட்டும்தான் உன்கிட்ட இருந்து எடுத்துக்குவே முடியாது’ என்று படத்தில் வரும் வசனம் என்னை அதிகமாக கவர்ந்தது என்று விஜய் கூறி இருக்கிறார். இதற்கு வெற்றிமாறன் அவர்கள் அசுரன் பட வசனம் குறித்து விஜய் பேசியிருப்பது மிகவும் நேர்மறையான ஒரு விஷயம் தான் என்று கூறியிருக்கிறார்.

விஜய் அரசியல் குறித்து எழும் விவாதம்:

அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அவர்கள் தேர்தல், தலைவர்கள் குறித்து பேசி இருந்தது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இவர் அரசியலுக்கு வருவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றெல்லாம் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். விஜய் நேரடியாக அரசியலில் களம் இறங்குவாரா? இல்லையா? என்பது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், அவர் அரசியலுக்குள் நுழைவதற்கான முயற்சிகளை எடுத்து இருக்கிறார் என்பதை மட்டும் உறுதி என்று கூறுகிறார்கள். நிச்சயம் வரும் காலத்தில் விஜய் அரசியலில் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது

Advertisement