கதை கேட்பதை நிறுத்திய விஜய், லாக் செய்யப்பட்ட கடைசி படம். இயக்குனர் யார் தெரியுமா?

0
498
- Advertisement -

விஜய்யின் தளபதி 69 படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது.

-விளம்பரம்-

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து இருந்தது. மேலும், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

- Advertisement -

விஜய் கோட் படம்:

யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்றே சொல்லலாம். காரணம், விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கிறார். இதனால் முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலக இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

தளபதி 69 படம்:

இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் தளபதி 69 படத்தை எந்த இயக்குனர் இயக்குவார்? என்று எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் தான் சோசியல் மீடியாவில் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் அட்லி, திரிவிக்ரம், வினோத், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் போன்ற பல பெயர்களை சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் விஜய்க்கு பலமுறை கதை சொல்லி இருக்கிறார்கள். தற்போது வெற்றிமாறன் அவர்கள் விடுதலை 2, வாடிவாசல் போன்ற படங்களை இயக்குவதில் பிசியாக இருப்பதால் அவர் விஜய் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

இயக்குனர்கள் குறித்த அப்டேட்:

கடைசி படம் என்பதால் தெலுங்கு இயக்குனருக்கு விஜய் வாய்ப்பு கொடுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 69 படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், விஜயின் கடைசி படத்தை அட்லி இயக்குவார் என்று கூறப்படுகிறது. தற்போது அட்லீ அவர்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது. இருந்தாலும், அட்லீ விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாக கூறியிருந்தார். இவரை அடுத்து இயக்குனர் வினோத் கமலை வைத்து படத்தை இயக்குகிறார்.

விஜய் சாய்ஸ்:

அதுமட்டுமில்லாமல் தனுசை வைத்து வினோத் படம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சமீப காலமாகவே வினோத் அவர்கள் விஜய் வைத்து படம் இயக்குவதில் அதிக ஆர்வமும், சமூக அக்கறை உள்ள கதைகளை கொடுத்து இருக்கிறார். இதனால் விஜய் உடைய கடைசி படத்தை வினோத் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் அவர்கள் கதை கேட்பதையே நிறுத்தி இருக்கிறாராம். அவருடைய மனதிற்கு பிடித்த இயக்குனரை தேர்வு செய்து விட்டார். அதிக வாய்ப்பு வினோத்திற்கு இருப்பதாக கூறப்படுகிறது. கோட் படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்த உடனேயே தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனரை விஜய் அறிவிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement