அப்படி இருந்தவங்களா இப்படி மாறிட்டாங்க. வைரலாகும் சீதா ராமம் பட நடிகையின் பழைய புகைப்படம்.

0
2184
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகையின் பழைய புகைப்படம் ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குநர் ஹனு ராகவபடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் சீதாராமம். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் இளவரசி நூர் மற்றும் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு இந்த படத்தின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. நடிகை மிருணாள் தாக்கூர் மகாராஷ்டிரா மாநிலம் துளி எனும் ஊரில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

- Advertisement -

மிருணாள் தாக்கூர் திரைப்பயணம்:

இதனால் இவர் தன்னுடைய கல்லூரி படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் மாடலிங் செய்தார். அதன் பின் இவர் நிறைய விளம்பரங்களில் நடித்தார். அதற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு ‘வெட்டித்தாண்டு’ என்ற மராத்தி படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதனை அடுத்து இவர் ‘சுராஜையா’ என்ற மற்றொரு மராத்தி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மிருணாள் தாக்கூர் நடித்த படங்கள்:

பின் 2018 ஆம் ஆண்டு லவ் சோனியா, சூப்பர் 30 ஆகிய திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதன் பிறகு இவர் மராத்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். பின் கடந்த ஆண்டு வெளிவந்த சீதாராமம் என்ற படத்தின் மூலம் இவர் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மிருணாள் தாக்கூருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில்தான் மிருணாள் தாக்கூரின் பழைய புகைப்படம் ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படமனது மிருணாள் தாக்கூர் கடந்து வந்த ஏற்ற இரக்கங்களை காட்டுவதாக இருந்தது. குறிப்பாக ஒரு நட்சத்திரத்திற்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் இடையிலான நீடித்த தொடர்பை அந்த புகைப்படம் அனைவருக்கும் நினைவூட்டியது, ஒரு படம் உற்சாகத்தையும் ஏக்கத்தையும் தூண்டும் என்பதை நிரூபித்து, மிருணாள் தாக்கூரின் கடந்த வந்த பாதையை நினைத்து ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement