தளபதி 66′ படத்தில் விஜய்க்கு டபுள் ரோலா ? உறுதி செய்த பிரகாஷ்ராஜ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

0
586
- Advertisement -

தளபதி 66 படத்தில் விஜய்யின் ரோல் குறித்து பிரகாஷ்ராஜ் பதிவிட்டிற்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

இதையும் பாருங்க : ஒரு வெஸ்டர்ன் பாட்ல எப்படிடா தவில் வாசிக்கறதுனு யோசித்தேன், ஆனால், ரகுமான் – காதலன் பட பாடலின் ரகசியத்தை சொன்ன பிரபல தவில் வித்வான்.

- Advertisement -

‘தளபதி 66’ படம் பற்றிய தகவல்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.

விஜய் 67 படத்தின் இயக்குனர்:

இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். ஏற்கனவே இந்தபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

தளபதி 66ல் விஜய் ரோல் :

சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்திக்க விஜய் சென்ற போது இருந்த கெட்டப் தான் தளபதி 66 படத்தில் விஜய்யின் கெட்டப் என்று கூறப்படுகிறது. இந்த கெட்டப்பில் அவர் இளமையான தோற்றத்தில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் விஜயின் கதாபாத்திரம் குறித்து பிரகாஷ்ராஜ் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். தளபதி 66 படப்பிடிப்பின்போது விஜயுடன் எடுத்த புகைபடத்தை பிரகாஷ்ராஜ் பதிவு செய்து கூறியிருப்பது,

விஜய் குறித்து பிரகாஷ்ராஜ் பதிவு:

விஜய் சற்று வயதான மற்றும் மாறுபட்ட கெட்டப்பில் இருக்கிறார். அதுவும் இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். ஹாய் செல்லம் நாங்கள் மீண்டும் திரும்பி விட்டோம் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி பிரகாஷ் ராஜ் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து தளபதி 66 படத்தில் விஜய் இரு வேடத்தில் நடிக்கிறார் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். மேலும், படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு கொண்டு வருகின்றனர்.

Advertisement