உங்க கணவர் கொடுத்து வச்சவர், இந்த கெட்டப்ல கூட – குஷ்பூவை வர்ணித்துள்ள ரஜினி.

0
401
- Advertisement -

குஷ்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்ன விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வயதானாலும் உன்னுடைய அழகும் ஸ்டைலும் மாறவில்லை என்பதற்கு ஏற்ப ரஜினிகாந்த் இன்னும் இளமையாக தான் இருக்கிறார். மேலும், சமீப காலமாகவே ரஜினிகாந்த் குறித்து ஏதாவது ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் அண்ணாமலை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது வெளியாகிறது. ரஜினி-குஷ்பூ நடிப்பில் வெளிவந்த படம் அண்ணாமலை.

- Advertisement -

அண்ணாமலை படம்:

இந்த படத்தில் சரத் பாபு, மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், அண்ணாமலை படத்தில் ரஜினி, குஷ்பு இருவருமே வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் குஷ்பூ வயதான கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபோது ரஜினி குஷ்புவை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். அப்போது குஷ்பூ, ஏன் அப்படியே பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

குஷ்பூ குறித்து சொன்னது:

அதற்கு ரஜினி, உங்களை திருமணம் செய்பவர் ரொம்ப கொடுத்து வைத்தவர். ஏனென்றால் இந்த வயதான கட்டத்திலும் நீங்கள் படு சூப்பரா அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷராப் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

லால் சலாம் படம்:

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்திருக்கிறது. இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வேட்டையன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்திற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய போஸ்டர் வெளியாகி இருந்தது. இதை அடுத்து ரஜினி அவர்கள் லோகேஷ் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement