இதுக்கு ஏன் 1000ரூபா கொடுத்து பாக்கணும் – பீஸ்ட் குறித்து டிடி போட்ட பதிவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். அப்படி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
604
Beast
- Advertisement -

பீஸ்ட் படம் குறித்து டிடி போட்ட பதிவால் ரசிகர்கள் பலரும் அவரை கேலி செய்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு இடம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் காலம் கடந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும் தொகுப்பாளர்கள் என்றால் சிலர் தான். அந்த வரிசையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. அதோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படம் குறித்து இவர் போட்டுள்ள பதிவு பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்தை தொடர்ந்து. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இதையும் பாருங்க : படத்துல நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க. ஆனா, அங்க போன அப்புறம் – போட்டு உடைத்த சிங்கம் புலி ஆண்டி நடிகை நீலு.

- Advertisement -

குவியும் நெகட்டிவ் விமர்சனங்கள் :

இது நெல்சன் திலீப் குமாரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். கோகோ, டாக்டர் உள்ளிட்ட படங்களைத் இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தில் புது மாற்றத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பீஸ்ட் படம் வித்தியாசமாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

ரசிகர்கள் ஏமாற்றம் :

பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படம் ரொம்ப சுமார் தான். கோகோ, டாக்டர் போன்ற இரண்டு படங்களிலும் கடத்தல் கான்செப்ட்டை கையாண்ட நெல்சன் இந்தப்படத்திலும் கடத்தல் கான்செப்டை கையாண்டிருப்பது கைகொடுக்கவில்லை. மொத்தம் பிளாப் தான் ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு படங்களில் வந்த கடத்தல், தீவிரவாதம் என எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல் அப்படியே அரைத்த மாவை அரைத்து இருக்கிறார் நெல்சன்.

-விளம்பரம்-

பீஸ்ட் குறித்து டிடி :

பீஸ்ட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பல்வேரு பிரபலங்களும் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படம் குறித்து டிடியும் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தொகுப்பாளியாக மட்டுமல்லால் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் டிடி. டிடி ரஜினியின் தீவிர ரசிகை என்பது பலருக்கும் தெரியும் அதே போல இவர் விஜய்யின் ரசிகையும் கூட. இப்படி ஒரு நிலையில் நேற்று முதல் நாளே பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு இந்த படம் குறித்து டிடி, பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

‘அரபிக் குத்து ஒரு சாங் போதும்

அதில் ‘அரபிக் குத்து ஒரு சாங் போதும், விஜய் ரசிகர்களின் முழு காசு வசூல் தான் பீஸ்ட். சார் சூப்பரா ஆடுவார்னு எல்லாருக்கும் தெரியும் ஆனாலும், வாயை பிளந்து கொண்டு என்னப்பா இவரு இப்படி ஆடுறாருனு தான் சொல்லுவீங்க’ முழுவது விஜய் ரசிகர்களுக்கான படம் நெல்சன் நீங்க ஒரு உண்மையான ரசிகர் ரசிச்சு எடுத்து இருக்கீங்க.எல்லா காட்சியிலும் சார் ஒரு ஹாலிவுட் ஸ்டார் மதிரி இருக்கார், அப்படி பிலிம் பண்ணி இருக்கீங்க மனோஜ்.

ரசிகர்கள் கேலி :

அனிருத் நீங்க இதுக்கு செமயா பண்ணி இருக்கீங்க. செல்வராகவன், vtv, சதிஷ், சுனில், கிலி பூஜா ஹெக்டே எல்லாரும் செமயா பண்ணி இருக்கீங்க. அன்பறிவு ஸ்டண்ட் எல்லாம் உங்களை ஸ்டன் ஆக்கும். நெல்சன் நீங்கள் எங்கள பெருமை படுத்துடீங்க’ என்று பதிவிட்டுள்ளார். டிடியின் இந்த பதிவை பார்த்த பலர் டிடியை வச்சி செய்து வருகின்றனர். அதிலும் இவர் ‘அரபிக் குத்து ஒரு சாங் போதும்’ என்று குறிப்பிட்ட கருத்திற்கு அந்த பாடலை பார்க்க ஏன் திரையரங்கிற்கு போக வேண்டும், அதை சன் மியூசிக்கிலேயே போடுவாங்க என்று கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Advertisement