புகழை அடிக்கச் சென்று டிடியை அறைந்த தீனா – வீடியோ இதோ.

0
1424
dheena
- Advertisement -

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் ரசிகர்களுக்கு எப்போதுமே பேவரட் ‘டிடி’ தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் டிடி. இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருக்கும் ரொம்ப பிடித்தமான தொகுப்பாளர் என்றால் அது டிடி என்று கூட சொல்லலாம். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
DD Neelakandan on Twitter: "My dear @ActDheena ur rocking in Thumba I'm so  proud of u da ❤️❤️❤️❤️ #ThumbaaFromTomorrow da besttttt wishes to Darshan  KeerthiPandian n the entire team ??… https://t.co/hK6OHgHeij"

இவர்களது திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றது. டிடி திருமணத்திற்குப் பிறகு படங்களிலும், எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து பின்னர் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றனர்.

- Advertisement -

தற்போது டிடி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் speed get set go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் டிடியை தீனா அறைந்த வீடியோ என்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான என் கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்குகினார்.

இந்த நிகழ்ச்சியை டிடி-யுடன் சேர்த்து காமெடி நடிகர் தீனாவும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிஸோட்டில் தீனா, டிடியை அடித்து உள்ளார். அந்த வீடியோவில் தீனா, புகழை அடிப்பது போல் ஒரு காட்சி வரும். அப்போது தெரியாமல் டிடி-யையும் தீனா அடித்துவிடுகிறார், தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement