விஜய் தொலைக்காட்சி பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு சினிமா பாதையை வழி வகுத்துக் கொடுத்துள்ளது அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், மாகாபா, ரம்யா, டிடி, ஜாக்குலின், ரக்சன் என்று பல்வேறு நபர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றினால் சினிமா வாய்ப்பு பெற்று விடுகிறார்கள் என்ற ஒரு மேஜிக்கை விஜய் டிவி ஏற்படுத்தியுள்ளது தற்போது விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஒரு பிரபல தொகுப்பாளரான நீயா நானா கோபிநாத்தும் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது தொலைக்காட்சி வட்டாரத்தில் ஹாட் நியூஸ்.
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கோபிநாத். தமிழை சரளமாக ஆங்கிலம் கலக்காமல் மிகவும் தெளிவான உச்சரிப்புடன் பேசுவதுதான் இவரது ப்ளஸ் பாயிண்ட். ஆரம்பத்தில் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த கோபிநாத் பின்னர் ஜெயா டிவி என்டிடிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார் கோபிநாத்.
தொலைக்காட்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் கோபிநாத் சினிமாவில் காலடி வைத்தார். இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தோனி நிமிர்ந்து நில் திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கோபிநாத் ஹீரோவாக படத்தில் நடிக்க உள்ளார். இது எல்லாத்துக்கும் மேல என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பாரதி கணேஷ் என்பவர் இயக்கிவுளார். இவர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான கண்ணுபடபோகுதய்யா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணு பட போகுதைய்யா படத்திற்கு பின்னர் தமிழில் எந்த படத்தியும் இவர் இயக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் யுத்தம், ஆமையகுடு என்று இரண்டு படங்களை இயக்கியுள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார் பாரதி கணேஷ். சமூக அக்கறை மையமாக கொண்டு எடுக்கப்படடவுள்ள இந்த படம், இந்த காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனிப்பது குறைந்துள்ளது பற்றியும், இதனால் குழந்தைகள் எப்படி தவறான பாதைக்கு சென்று விடுகிறார்கள் என்பதையும். பிள்ளைகளை சமுதாயத்தில் மதிக்கத்தக்க ஒரு நல்லவராக எப்படி வளர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தும் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சதிஷ் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரமாக அக்ஷிதா, ராகுல், ஷோபன் , ஆதித்யா மற்றும் மவுரியா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். ஏற்கனவே, கோபிநாத், நிமிர்ந்து நில் படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கோபிநாத்தின் நடிப்பு இயலப்பாகவே இருந்தது. எனவே, இந்த படத்திலும் கோபிநாத்தின் மதிப்பு அனைவரையும் இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இந்த படத்தில் ஹீரோவாக இல்லாமல், ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் பெயரெடுப்பர் என்று நம்பப்படுகிறது.