தன் குரலை கேலி செய்யும் நபர்களுக்கு ஜாக்லின் கொடுத்த அதிரடி பதிலடி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க

0
694

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

View this post on Instagram

Look at you before u see others 😂👍

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் தன்னை கேலி செய்யும் நபர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது குரலை கேலி செய்த நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதில், என்னுடைய குரலை பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம், அது என்னுடைய அப்பா அம்மாவிடம் இருந்து வந்தது, நான் அதை விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லை என்றால் அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் என்னை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் நினைத்ததை விட நான் உயரத்தை அடைவேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement