மேடையிலேயே நடிகையின் ஆடை குறித்து அசிங்கமாக பேசிய பயில்வான் – வெளுத்து வாங்கிய ஜாக்லின்.

0
580
Jackline
- Advertisement -

நடிகையின் ஆடை குறித்து மேடையில் மோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதனை ஜாக்லின் விமர்சித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாடகி சுசித்ரா அளித்திருக்கும் புகாரின் அடிப்படையில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

-விளம்பரம்-
jackline

அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். தொடர்ந்து நடிகைகள் குறித்து அவதூராக பேசிவரும் இவரை நடிகை ராதிகா சரத்குமார் நடுரோட்டில் திட்டி தீர்த்தார். அதே போல இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் இவரை நடு ரோட்டில் வம்பிழுத்து செருப்பால் அடிப்பேன் என்று அடிக்கவே சென்று விட்டார்.

- Advertisement -

என்ன தான் இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், நடிகைகள் குறித்து அவதூறாக பேசுவதை மட்டும் பயில்வான் ரங்கநாதன் நிறுத்தியபாடில்லை. இப்படி ஒரு நிலையில் விழித்தெழு என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த படத்தின் கதாநாயகியை பார்த்து இவர்தான் கதாநாயகி என்பது தெரிகிறது ஏனென்றால் தொடைக்கு மேல ஏத்தி போட்டு இருக்காங்க என்று அவரது ஆடையை விமர்சித்தார்.

அப்போது படக்குழுவை சேர்ந்த சிலர் அவர் கதாநாயகி இல்லை வில்லி என்று கூறியிருந்தார்கள். அதற்கு அப்படியா அப்போது இன்னும் கொஞ்சம் மேலே தூக்கிக் கொள்வது தான் பொதுவாகவே கதாநாயகிகள் எப்படி ஆடை அணிந்து வருவது தான் பொதுமக்களே விரும்பினார்கள் என்று பெரிய நாயகியே சொல்லி இருக்கிறார் என்று பயில்வான் சொன்னதை கேட்டு எந்த நடிகை அப்படி சொன்னார் என்று சித்தப்பு சரவணனே ஷாக் ஆனார்.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ,இது குறித்து விஜய் டிவி தொகுப்பாளனான ஜாக்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமர்சித்து இருக்கிறார். அதில் ”இந்த ஆளுக்கு என்ன தான் பிரச்சனை என்பது எனக்கு தெரியவில்லை யார் யார் வாழ்க்கையில் என்ன நடக்கிறது அவங்களோட கேரக்டர் எப்படி அவங்க இப்படித்தான் டிரஸ் பண்ணுவாங்க என்று அனைத்தும் இந்த ஆளுக்கு எப்படி தெரிகிறது. மிகவும் எரிச்சலாக இருக்கிறது.

இது போன்ற நபர்களை எப்படி மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் இவருடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பெண்களையும் நினைத்து கவலையாக இருக்கிறது’ என்று பயில்வான் ரங்கநாதனை வறுத்தெடுத்துள்ளார் ஜாக்லின். விஜய் டிவியில் தொகுப்பாளனாக இருந்த ஜாக்லின் தேன்மொழி ba என்ற தொடரில் நடித்து வந்தார்.அந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது ஜாக்லினை சின்னத்திரை பக்கமே பார்க்க முடிவதில்லை.

Advertisement