விஜய் டிவி ஜோடி ஆனந்திய நினைவிருக்கா ? குடும்பம் குட்டின்னு இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
1018
anandhi
- Advertisement -

பொதுவாக நடிகர்களை விட நடிகைகள் தான் திருமணத்திற்கு பின்னர் ஆள் அட்ரஸ் இல்லாமல் இண்டஸ்ட்ரியை விட்டு காணாமல் போய்விடுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி புகழ் ஆனந்தி நினைவிருக்கிறதா ? விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் ஆனந்தி. சிவகார்த்திகேயன் போட்டியாளராக பங்குபெற்ற பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் இவர், சிவகார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று அந்த சமயத்தில் பலர் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

அதன் பின்னர் தொலைக்காட்சியில் சீரியல் தொடர்களில் நடிக்கத்துவங்கினார். தமிழில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த இவர் இதுவரை தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : ஹீரோவாக களமிறங்கிய நடமாடும் நகை கடை ஹரி நாடார் – ஜோடியாக வனிதா. பட பூஜைக்கு கோட் சூட்டில் வந்த ஹரி நாடார்.

- Advertisement -

தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த ஆனந்தி கடந்த 2017 ஆம் ஆண்டு அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஆந்திராவில் நடைபெற்றது. மேலும், அந்த திருமணத்திற்கு ஆர்யா, நிஷா கணேஷ் போன்றவர்கள் பங்குபெற்றனர்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைத்தது கூட நடிகர் ஆர்யா தான். அதுவும் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா ஆர்யாவீர். சமீபத்தில் ஆனந்தியின் குழந்தைக்கு மூன்றாம் பிறந்தநாள் கூட சென்றிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement