‘வீட்டு வேலை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு’ மாடு மேய்க்கும் விஜய் டிவி பிரபலம். வீடியோ இதோ.

0
31915
- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் கொரோனா என்ற உயிர்கொள்ளி வைரஸால் ஸ்தம்பித்து போயுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் செய்யும் வேலைகள், உடற்பயிற்சி வீடியோக்கள் என்று பதிவிட்டு தங்களது ரசிகர்களை கொஞ்சம் டைம் பாஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் காமெடி நடிகரும் கலக்க போவது யாரு புகழ் தீனா, தற்போது கிராமத்தில் மாட்டை மேய்த்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Dheena

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து தீனா செய்த காமெடிகள் நாம் யாராலும் மறக்க முடியாது.

இதையும் பாருங்க : யார் தான் இதையெல்லாம் பரப்புகிறார்கள். கடுப்பான நடிகை கீர்த்தி சுரேஷ்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-
View this post on Instagram

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on

கைதி திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள். தற்போது கைது பட இயக்குனர் இயக்கியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு நடந்த வருமான வரி சோதனை குறித்து இவர் சூசகமாக பேசிய பேச்சு சமூகவலைதளத்தில் பெரும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : தனது தாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவின் தற்போதைய நிலை.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தீனா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியிருக்கிறா.ர் தற்போது ஊரடங்கு உத்தரவால் பலரும் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் பலரும் வீட்டில் எதாவது வேலை செய்து பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தீனா தன்னுடைய வீட்டில் உள்ள மாட்டை மேய்க்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அந்த பதிவில் வீட்டு வேலை செய்து எவ்வளவு நாள் ஆகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்

Advertisement