மதுமிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த விஜய் டிவி.! காரணம் இது தானாம்.!

0
4988
madhumitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

madhumitha

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் பேசப்பட்டு தான் பங்கேற்றுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சம்பள பணத்தை தரவில்லை என்றால் மதுமிதா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாக விஜய் தொலைக்காட்சியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

இதையும் பாருங்க : உள்ள இருக்கும் போது ரெண்டு பெரும் அவ்வளவு சண்டை போட்டாங்க.! இப்போ மட்டும் இப்படியா.! 

- Advertisement -

இதுகுறித்து அவர் தரப்பில் கூறியுள்ளதாவது, மதுமிதா சம்பளமாக  11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.  அதனை ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19ம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மதுமிதா இதுவரை எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை. அதே போல அவரை நாம் தொடர்புகொள்ள முயன்ற போதும் அவர் மறுத்துவிட்டார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுமிதாவை சந்தித்த டேனி பேசுகையில் மதுமிதாவிற்கு சம்பள பாக்கி இருப்பதால் அவர் எதை பற்றியும் இப்போது பேச வேண்டாம் என்று கூறியதாக டேனி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement