ரகுவரன் மற்றும் ரோகினி 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த எட்டு ஆண்டுகள் வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் ரகுவரன் இறந்தார். இந்நிலையில் அவரது முன்னாள் மனைவி அவர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ரகுவரன் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் ரகுவரன். 80ஸ் காலகட்டம் தொடங்கி 2000 காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் அதன் பின் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்து போனது. பின்னர் இவர் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மேலும், 90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக பிரபலமாக இருந்தார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரகுவரன். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது..
ரகுவரன் பற்றி ரோகினி கூறியது:
நடிகர் தனுஷ் என்னுடைய படத்தில் ( யாரடி நீ மோகினி ) அப்பா கதாபத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினார். அதற்கு ரகு கண்டிப்பாக நடிக்கிறேன். நீ பார்பதற்க்கு என்னுடைய மகன் போலவே இருக்கிறாய் என்று ரகு தனுஷிடம் கூறினார். ஆரம்ப கட்டத்தில் எங்களுக்குள் நிறைய பிரச்சனைகள் இருந்தது. எனக்கு அவர் மீது கோபமும் குற்றச்சாட்டும் இருந்தது. அது எல்லாம் எங்களுக்குள் இருந்தது. அந்த இடத்தை மட்டும் தாண்டினால் அவர் நடிகராக எங்களுக்குள் இருந்து வருகிறார். அவரது மகன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர் இருந்து தான் வருகிறார்.
என்னுடைய மகன் புரிதல் உள்ளிட்டவற்றில் அவர் இருந்து வருகிறார். இந்த செயல்களை எல்லாம் அவர் அருகில் இருந்து பார்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று அவ்வபோது தோன்றும். நான் முதலில் அவருடைய தீவிர ரசிகை. எங்களுக்குள் பல பிரச்னைகள் இருந்து வந்தது. எனக்கு எதிராக பல விஷயங்கள் இருந்தன. ஆனால் அதெல்லாம் எங்களுக்குள் தனிப்பட்டது. அவர் இறந்த பிறகும், அவர் நமக்குள் வாழ்கிறார். எனது தோற்றம் தவிர, எனது மகனின் ஆளுமையும் ரகுவைப் போன்றது, அவர் ஏதாவது விரும்பினால், அவர் அதை அதீத பிடிவாதமாக செய்து செய்வார் ” மனம் உருகி அவருடைய முன்னாள் மனைவி ரோகினி கூறினார்.