விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் செந்தூர பூவே என்ற மெகா தொடர் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இது காதல் நிறைந்த குடும்ப சீரியல். நடுத்தர வயது (45) உடைய துரைசிங்கத்தைப் பற்றிய கதை. இவர் மனைவியை இழந்தவர். இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல் மற்றும் கனி என்ற இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு துரைசிங்கம் மறு திருமணம் பற்றி யோசிக்கவில்லை.
சூழ்நிலைகள் காரணமாக அவரை மறுமணம் செய்து கொள்ள அவரது தாய் வலியுறுத்துகிறார். அதன் காரணமாக துரைசிங்கம் ரோஜாவைத் திருமணம் செய்ய நேர்கிறது. ரோஜா, துரைசிங்கத்தின் மகள்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர் ஆவார். ரோஜா – துரைசிங்கம் திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்தியாசம் உள்ளது. அதையும் மீறி அவர்கள் இருவரும் எவ்வாறு வாழ்வில் இணைகிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது இந்த ‘செந்தூரப் பூவே’ மெகா சீரியல்.
இந்த துரைசிங்கம் கதாபாத்திரத்தில் நடிகர் ரஞ்சித் நடிக்கிறார். நடிகர் ரஞ்சித் அவர்கள் முதல் முறையாக சின்னத்திரை தொடரில் நடித்து உள்ளார். இந்நிலையில் இந்த சீரியல் குறித்து நடிகர் ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, என்னுடைய தாய் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் தான் என்னை டிவி தொடரில் நடிக்க வேண்டும் என்றும், தினமும் உன்னை நான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், நான் போம்மா அதெல்லாம் நமக்கு செட்டாகாது என்று சொல்லி விட்டேன்.
ஆனால், இன்று என் தாயின் ஆசையை படி நான் சின்னத்திரையில் நடிக்கிறேன். ஒவ்வொருவர் வீட்டிலும் நான் ஒரு அங்கமாக மாறி உள்ளேன் என்று கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் ரஞ்சித். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.