சன் தொலைக்காட்சயில் அசத்த போவது யாரு துவங்கி விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது போவது யாரு நிகழ்ச்சி வரை அனைவரையும் சிரிக்க வைத்தவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும் நடிகருமான அசார். டி எஸ் கே – அசார் ஜோடி என்றால் ரசிகர்ளுக்கு அதிக பரிச்சியம்.
தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அசார் எந்த ஒரு அறிவிப்புமின்றி அவசர திருமணம் செய்துகொண்டுள்ளார். பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றாலும் மிகவும் சிம்பிளாக தனது திருமணத்தை அவசர அவசரமாக முடித்துள்ளார் அசார்.
தனது திருமணம் குறித்து அவர் தெரிவிக்கையில், என் மனைவி ஷாஜிதா மெடிக்கல் (லேப் டெக்னீஷியன்) படிப்பு முடிச்சிருக்காங்க. இனிமே அவங்கதான் எங்கவீட்டு ஹோம் மினிஸ்டர். வேலைக்கு அனுப்புற ஐடியாலாம் இல்ல’’ என்றவரிடம், ஹனிமூன் பிளான் பற்றிக் கேட்கபட்டுள்ள போது “கல்யாணத்துக்கே தலை சுத்திப் போச்சு. அவ்வளவு டென்ஷன், வேலைகள், பர்சேஸ். இனிமேல்தான் ஹனிமூன் பற்றி யோசிக்கணும்.
இந்தப் பேட்டி மூலமாக என் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும், வர நினைத்தவர்களுக்கும், வாழ்த்துகளைப் பகிர்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்” என்றார் அசார். அசாரின் திருமணத்திற்கு டிடி, பிரியதர்ஷினி, பிரியங்கா, சுட்டி அரவிந்த், ரோபோ சங்கர் மனைவி, திண்டுக்கல் சரவணன் மற்றும் கேபிஒய் டீமில் எல்லோரும் வந்திருந்து சிறப்பித்தனர்.