நிறைவடைய போகும் பிக் பாஸ் நிகழ்ச்சி.! விஜய் டிவி களமிறக்கிய புதிய தொடர்.!

0
3824
vijay-tv-serial
- Advertisement -

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் புதிதாக ஒளிபரப்பாகும் தாழம்பூ தொடரை குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றன.இந்த புதிய சீரியல் குறித்து மக்களிடையே ஆர்வமும், ஆவலும் தோன்றுகிறது. தற்போது உள்ள மக்கள் வெள்ளித்திரைக்கு சென்று படங்களை பார்ப்பதை விட வீட்டிலேயே உட்கார்ந்து படி சீரியலை பார்க்கும் நபர்கள் தான் அதிகமாக உள்ளனர்.அதுவும் சீரியலுக்கு என ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வந்த வண்ணம் உள்ளன.மேலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்க்க சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமாக உள்ளனர். இதனாலேயே தொலைக்காட்சிகளில் சீரியலை அதிகமாகிக் கொண்டு செல்கின்றனர் சேனல் காரர்கள் .அப்படி பார்த்தால் சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் நாளுக்குநாள் ஹிட்டு கொடுத்து மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இதனாலேயே ஒருவருக்கு ஒருவர் (சேனல்கள்) போட்டி போட்டு நல்ல தொடர்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் நிறைய ரீமேக் தொடர்களையும் கொடுத்துள்ளார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் பிறமொழிகளில் இருந்து காப்பி செய்யப்பட்டு தமிழ் மொழியில் மொழிபெயர்த்து தொடர்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும், டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சேனல் முதலிடம் பிடிப்பது என்ற போட்டியும் சின்னத்திரையில் நடந்து வருகின்றன. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ், கல்யாணபரிசு, அருந்ததி, கண்மணி, நாயகி போன்ற பல சீரியல்கள் அதிக அளவு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், நாமிருவர் நமக்கிருவர் போன்ற தொடர்களின் மூலம் மக்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளது. விஜய் டிவி தொடர்களை மட்டுமில்லாமல் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளையும் தந்து வருகிறது. இந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் இரட்டை ரோஜா போன்று பல தொடர்களை கொடுத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அதிலும் செம்பருத்தி சீரியல் எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகும் தொடர்களை விட நம்பர் 1 சீரியலாக வந்து கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : கவின் விஷயத்தில் சேரன் செய்த செயல்! ஷாக்கான ரசிகர்கள்.!

இப்படி நாளுக்கு நாள் போட்டிக்காக பல்வேறு சானல்களில் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பாகி, டிஆர்பி ரேட்டை அதிகப் படுத்திக் கொண்டிருக்கும் டிவி சேனல்கள். அந்த வரிசையில் சன் டிவி தற்போது ஒரு புதிதாக ஒரு சீரியலை விரைவில் கொண்டு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அது பாம்பு கதையை மையமாகக் கொண்ட சீரியல் என செய்தி வெளியாகி உள்ளது. இந்த பாம்பு கதை கொண்ட தொடரின் பெயர் தாழம்பூ.இந்த தாழம்பூதொடருக்கான ப்ரோமோவும் வெளிவந்து, இதுவரை 4 லட்சம் மக்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.பேய், பாம்பு,கதை என்றாலே மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் பார்ப்பார். மேலும், இதற்கு முன்னாலே சன் டிவி சேனல் நாகினி என்ற ஹிந்தி சேனலின் பாம்பு சீரியலை ரீமேக் செய்து தமிழில் வெளியிட்டார்கள். அது மக்களிடையே வரவேற்பும் தந்தது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல், தமிழில் நந்தினி என்ற ஒரு பாம்பு சீரியலிலும் வெளியிட்டார்கள். இதை தொடர்ந்து மக்களிடையே பாம்பு சீரியல் என்றாலே அதிக ஆர்வமும் ஆவலும் ஏற்படுத்துகிறது என்ற தகவலின் மூலம் இந்த புதிய தாழம்பூ பாம்பு கதையை வெளியிட உள்ளார்கள் சன் டிவி சேனல். மேலும் தாழம்பூ சீரியல் குறித்த பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் இந்த சன் டிவி தொலைக்காட்சிகள் கொண்டு வரும் “தாழம்பூ” தொடரை தொடர்ந்து மற்ற சேனல்கள் பாம்புகளை மையமாக கொண்டு கதை வரப்போகிறார்களா ?? என்றும் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு இடுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement