10 வருடத்திற்கு பிறகு தனது சொந்த ஊர் சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- இதுதான் அவரது வீடா?

0
521
Kumaran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
kumaran

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும்.

- Advertisement -

கதிர் – குமரன் :

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சீரியலில் புதிய முல்லையாக லாவண்யா நடித்து வருகிறார். அதே நேரத்தில் கதிர் காதாபத்திரத்தில் குமரன் தங்கராஜன் என்பவர் நடித்து வருகிறார்.

குமரன் பற்றிய தகவல் :

குமரன் தரங்கராஜன் ஒரு நடிகர் மட்டுமல்ல நடன கலைஞரும் ஆவார். இவர் ஜோடி NO 1 நிகழ்ச்சியில் நடன கலைஞராக பணியாற்றி, பின்னர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவ என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். பின்னர் 2015ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த “இது என்ன மாயம்” என்று படத்தில் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாக்கினார். மேலும் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் குமரன் தங்கராஜன் ஸுஹாசினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது பாண்டியன் ஸ்ட்டோர்ஸ் சிரியலில் நடித்து வரும் இவர் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சிரியலில் தற்போது மூர்த்தி குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாகிறது. அதனை எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள் என்பதை தொடர்ந்து சிரியலானது நகர்ந்து வருகிறது.

குமரன் பதிவிட்ட புகைப்படம் :

இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சிரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது குமரன் தஞ்சாவூரில் இருக்கும் தன்னுடைய சொந்த ஊருக்கு இந்த பொங்கலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் அப்பா குமரன் நெற்றியில் பொட்டு வைக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, 10 வருடங்களுக்கு பிறகு ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement