விஜய் டிவி ராமர் ஒரு அரசு அதிதாரி என்ற தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல காமெடியன்கள் பிரபலமடைந்து இருக்கின்றனர். சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை போன்ற பலர் விஜய் டிவியில் இருந்து வந்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருவது போல பல காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சினிமாவிலும் காமெடியான நடித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான காமெடியானன என்னமா ராமரும் ஒருவர் தான்.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒரே வசனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானது இரன்டு பேர் தான், ஒன்று லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றொன்று என்னமா ராமர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் இன்னும் கலக்கி வருகிறார் ராமர்.அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்ச போச்சு என்ற பகுதியில் இவர் அடிக்கும் லூட்டிகள் ஏறலாம்.
இதையும் பாருங்க : சிவகார்த்திகேயனுடன் என்ன தான் பிரச்சனை ? பல ஆண்டு கழித்து முதன் முறையாக பேசிய அருண்விஜய். வீடியோ இதோ.
பெண் வேடத்தை விரும்பாத மனைவி :
அது மட்டும் இல்லாமல் இவர் பெண் வேடம் அணிந்து வந்தால் தான் ரசிகர்கள் இவரை பெரிதும் விரும்புவர். ஆனால் தான் பெண் வேடம் அணிவதை தனது மனைவியும்,குழந்தைகளும் விரும்பைவில்லை என்று ராமர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.அதனால் தான் என்னவோ இவர் தனது குடும்ப நபர்களை இது வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் அழைத்து வந்தது இல்லை. ஆனால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று இவருக்கு சிறந்த காமெடியின் என்ற விருதை வழங்கியுள்ளது.
ராமரின் குடும்பம் :
அந்த விருது வழங்கும் விழாவில் தனது குடும்பத்துடன் வந்துள்ளார் ராமர்.ராமருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரது மனைவிக்கு ராமர் பெண் வேடம் அணிந்து நடிப்பது சுத்தமாக பிடிக்காதாம். ஆனால் ராமர் அந்த வேதத்தின் மூலம் தான் இன்று இந்த விருதை பெற்றிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் தனது மனைவி கூறியதற்காக பெண் வேடம் அணிந்து நடிப்பதை தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டதாக கூறி இருந்தார் ராமர்.
அரசு வேலை பார்த்து வரும் ராமர் :
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்று வருகிறார். அதே போல சமீபத்தில் நிறைவடைந்த சூப்பர் டாடி நிகச்சியில் கூட தன் மகளுடன் பங்கேற்று இருந்தார் ராமர். தற்போது கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். ராமரை பற்றி பல விஷயங்களை அறிந்தாலும் அவர் அரசு அதிகாரி என்ற தகவல் தற்போது தான் வெளியாகி இருக்கிறது.
எம்.பி வெங்கடேசன் பதிவு :
மதுரை எம்.பி வெங்கடேசன், ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, ‘கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ராமரை இத்தனை நாள் வரை தொலைக்காட்சி நடிகர் மட்டுமே நினைத்து வந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.