வெறும் அழகுக்காக மட்டுமல்ல, தன் பிட்னஸ் மூலம் ரம்யா செய்த சாதனை. இனி அவர் ஆங்கர் மட்டுமில்லை

0
543
ramya
- Advertisement -

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் ரம்யா. இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் பிட்னஸ் பிரீக் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார்.

-விளம்பரம்-
Image

கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர். அதனுடைய வெளிப்பாடுதான் தற்போது இவருக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் நடிகை ரம்யா செய்த சாதனை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனால் நடிகை ரம்யா ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இவர் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துவதற்கும் தகுதியானவர். மேலும், இது குறித்து ரம்யா சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இரண்டு வருடமாக நான் சரியாக தூங்காமல், வாராந்திரம் மாடியூல் படிப்பது, பணிகளை செய்வது, நேரடி பயிற்சி அழைப்புகள் மற்றும் படப்பிடிப்பு வேலை, பயணம் மற்றும் வாழ்க்கைக்கு இடையில் வந்த ஒவ்வொரு தேர்விலும் தகுதி பெறுதல் என பல வேலைகளை செய்துகொண்டிருந்தேன். இறுதியாக இப்போது தான் அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. நான் ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளர் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடவுள், அம்மா, அப்பா, அன்பான நண்பர்கள், என் அன்பான இன்ஸ்டா ஃபேமிலி என அனைவருக்கும் நன்றி. நான் ஒவ்வொரு முறை தேர்வு எழுதும் போதும் எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்திய உங்களுக்கு ரொம்ப நன்றி. தொற்று நோய்களின் போது எனக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்தது. அப்போது நண்பர் ஒருவர் நியூயார்க் பற்றி கூறினார். மேலும், ஆரம்பத்தில் இது எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால், அதன் பிறகு பல சவால்கள் வந்தது.

-விளம்பரம்-

பல கடின உழைப்புக்குப் பிறகு தான் இந்த சான்றிதழ் என் கைவசம் வந்தது. பட்டமளிப்பு விழா நான்கு நாட்களுக்கு முன்பு தான் நடந்தது. இப்போது நான் ஒரு சான்றளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளராக இருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். தற்போது இவர் பதிவிட்ட பதிவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை நிகில் முருகானந்தம் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார். அதோடு பலரும் ரம்யாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement