14 வயதில் கடல் படத்தில் நடித்த ராதா மகளா இது ? அம்மாவை போல எப்படி ஆகிட்டார் பாருங்க.

0
1780
Thulasi
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் பிரபலமான 80களின் முன்னணி நடிகையான ராதாவின் மகள் தான் நடிகை துளசி நாயர். அதோடு ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகாவின் சகோதரியும் ஆவார். மேலும்,துளசி நாயர் சினிமா துறைக்கு 2013 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதுமட்டும் இல்லாமல் நடிகை துளசி நாயர் அந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசவும் பட்டார். மேலும்,அவருக்கு இந்த படத்திற்காக அறிமுக நடிகை என்ற விருதும் கிடைத்தது. அதனை தொடர்ந்து துளசி நாயர் அவர்கள் 2014 ஆம் ஆண்டு ரவி கே.சந்திரன் இயக்கிய ‘யான்’ படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும்,இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அதோடு துளசி நாயர் தன்னுடைய 14 வயதில் சினிமா துறைக்கு நடிக்க வந்தார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போனார்கள். மேலும்,உண்மையாகவே நடிகை துளசி நாயர் 14 வயதில் ‘கடல்’ படத்தில் நடித்தாரா!! என்று அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய நடிப்பும், அழகும் இருந்தது.

- Advertisement -

இப்படி துளசி நாயர் அவர்கள் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்த உடனே அடுத்து அடுத்து இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வந்து வேற லெவல்ல பட்டையை கிளப்புவார் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள். ஆனால், அவர் சினிமா துறையில் நடிப்பதால் தன்னுடைய படிப்பை பாதியிலேயே நின்றது. அதனால், துளசி நாயர் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பை தொடரலாம் என்று யோசித்தார்.

மேலும்,துளசி நாயர் அவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் நடிகை ராதா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராதாவை போல படு குண்டாக மாறி அடையாளம் தெரியாத அளவு மாறி இருக்கிறார் துளசி நாயர்.

-விளம்பரம்-
Advertisement