ஒரு கட்டத்துக்கு மேல தொந்தரவு தாங்கல அதனால், கேரவனுக்கு அழைத்து இப்படி சொன்னேன். சீரியல் நடிகை பிரகதி ஷாக்கிங் பேட்டி.

0
58106
pragathi
- Advertisement -

சமீப காலமாகவே சினிமாவில் உள்ள பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை வருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், கடந்த சில காலமாக பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அதுவும் மீடு(Mee Too) விவகாரம் தலையெடுத்து ஆடுகிறது. நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக Me Too ஆன்லைன் மூலம் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர்.

-விளம்பரம்-

பெரும்பாலும் #Meetoo புகார் அளிப்பது இளம் நடிகையாக தான் இருந்து வருகிறது. ஆனால், 44 வயதாகும் நடிகையான பிரகதி தனக்கு நேர்ந்த மீடூ அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி .

இதையும் பாருங்க : ஊரடங்கில் கூட வீடியோ கால் மூலம் படு கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய கோமாளி பட நடிகை.

- Advertisement -

இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில. ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் இருக்கின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரகதி மூத்த காமெடி நடிகரால் ல் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

pragathi

இதுகுறித்து தெலுங்கு இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரு படப்பிடிப்பில் மூத்த காமெடி நடிகருடன் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையில் இருந்தன. பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவிற்கு மேல் அவரது தொந்தரவு தாங்க முடியாததால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது.

இதையும் பாருங்க : அயன் படத்தில் சூர்யா போட்ட லேடி டிரஸ் இந்த நடிகை இந்த படத்தில் போட்ட அதே டிரஸ் தான்.

-விளம்பரம்-

தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.பிரகதி தமிழை விட தெலுங்கில் தான் அதிக படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement