திடீரென்று நிறுத்தப்பட்ட தேன்மொழி சீரியல் சித்தி சீரியலுக்கு தாவிய பிரபலம்.

0
3789
thenmozhi
- Advertisement -

80, 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ராதிகா. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டு வந்துள்ளார். 90 கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று தான் சித்தி. மேலும், பல வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து ராதிகா சரத்குமார் வெளியேறியது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

ராதிகா சீரியலில் இல்லை என்றாலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த சீரியலில் தற்போது கவின், வெண்பா இருவரும் சுப்புலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். பல போராட்டங்கள் உடன் கவின், வெண்பா வேலை செய்கிறார்கள். தற்போது பல சுவாரசியங்கள், திருப்பங்களுடன் இந்த கதை சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் விஜய் டிவி தேன்மொழி சீரியல் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் சில கதாபாத்திரங்கள் தவிர்க்க முடியாத சூழலால் வெளியேறுகிறார்கள். அந்த வகையில் தற்போது சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வீனா வெங்கடேஷ் மாற்றப்பட்டுள்ளார்.

chithi2

அவருக்கு பதிலாக சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு உஷா எலிசபெத் சுராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவெ விஜய் டடிவியில் பிரபலமாகி வரும் தேன்மொழி சீரியலில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக நாயகி ப்ரீத்தி சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உஷா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement