தமிழும் சரஸ்வதியும் தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல். எந்த சீரியல் தெரியுமா?

0
374
- Advertisement -

விஜய் டிவியில் இருந்து முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பான தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திரா நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களுடன் ரேகா கிரிஷ்ணப்பா, மீரா, ரமணிசந்திரன், நவீன் வெற்றி, பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. காரணம், ஹீரோ தமிழின் மச்சான் அர்ஜுன் சொத்துக்களை எல்லாம் ராகினியின் பெயருக்கு ஏமாற்றி எழுதி வாங்கி விடுகிறார்.

- Advertisement -

தமிழும் சரஸ்வதியும் சீரியல்:

அதற்குப்பின் தமிழையும் அவருடைய குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்று தேவையில்லாத பல வேலைகளை செய்கிறார். இதையெல்லாம் தமிழின் தங்கை ராகினி நம்பிகிறார். அதோடு தன்னுடைய அண்ணனையே சந்தேகப்பட்டு திட்டிக்கொண்டே இருக்கிறார். திரும்பத் திரும்ப அதேதான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் அர்ஜுனை அவருடைய அக்கா வீட்டுக்காரர் அடித்து கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அந்த பழியும் தமிழ் மீது தான் ராகினி போடுகிறார்.

கிழக்கு வாசல் சீரியல்:

இப்படி ரிப்பீட் மோடில் என்ன செய்தாலுமே தமிழ் மீது தான் டாக்டராக இருக்கும் ராகினி போடுகிறார். இதனாலே ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. தயவு செய்து இந்த சீரியலை முடித்து விடுங்கள் என்று கூறுகிறார்கள். அதே சமயம் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியலும் கூடிய விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியலில் வெங்கட், ரேஷ்மா, தினேஷ், எஸ்.ஏ சந்திரசேகர், அருண் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் குறித்த அப்டேட்:

மேலும், இந்த சீரியல் நடிகர் விசுவின் நடிப்பில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்று பலரும் கூறினார்கள். இருந்தாலும், இந்த தொடர் தொடங்கி சில வாரங்கள் கடந்தும் எதிர்பார்த்து அளவிற்கு டிஆர்பி ரேட்டிங் வரவில்லை. பின் இந்த சீரியலுடைய இயக்குனர் மனோஜை மாற்றி வேறு இயக்குனர் எடுக்கிறார். ஆனாலும், பெரிதாக இந்த சீரியல் பிரபலம் அடையவில்லை. இதனால் இந்த சீரியலையும் விரைவில் முடிக்க இருக்கிறார்கள்.

புது சீரியல்:

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் புதிதாக வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் திரவியம் நடிக்கிறார். அதற்கான ப்ரோமோ எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த தமிழும் சரஸ்வதியும், கிழக்கு வாசலில் ஆகிய இரு சீரியர்களில் எதை சீக்கிரமாக முடித்து புது சீரியலை ஒளிபரப்ப இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement