சன் குழுமத்திற்கு போட்டியாக விஜய் குழுமம் ஆரம்பிக்கப்போகும் இரண்டு புதிய சேனல்.

0
20151
vijay-tv
- Advertisement -

கோலிவுட் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பல பிரபலமான நடிகர்கள் எல்லாரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள் தான். நடிகர் சிவகார்த்திகேயன், காமெடி ஆக்டர் சந்தானம் தொடங்கி, மாகாபா ஆனந்த், ரியோ ராஜ், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் விஜய் டெலிவிஷன் மூலம் தான் வெள்ளித்திரைக்கு வந்தவர்கள். இவர்கள் அனைவரும் விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு நிகழ்ச்சிகளிலும், சீரியலிலும் நடித்து அதன் மூலம் தான் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு சென்றார்கள். தற்போது ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டி.ஆர்.பி. ரேட்டுக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பல சூப்பர் ஹிட் சீரியல்களையும், பிரம்மிக்க வைக்கும் நிகழ்ச்சிகளையும் தந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் டாப் சேனல்களில் ஒன்றாகவும் விஜய் டெலிவிஷன் திகழ்ந்து வருகிறது. வித்தியாசமான முயற்சிகளில் நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தை அடிச்சுக்க முடியாது. அது மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க ஒளிபரப்பாகி மிகப் பிரபலம் அடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் ஒளிபரப்பு செய்தது நம்ம விஜய் டெலிவிஷன் தான். தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக ஸ்டார் விஜய் விளங்கி வருகிறது.

இதையும் பாருங்க : மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார். அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இந்த ஸ்டார் விஜய் நிறுவனம் தமிழில் ஒரு புதிதாக ஒரு தொலைக்காட்சி தொடங்க உள்ளனர். அது விஜய் மியூசிக் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த விஜய் மியூசிக் சேனல் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே பாடலுக்கு என்று பல சேனல்கள் ஒளிபரப்பாகி கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அவற்றுக்கெல்லாம் போட்டியாக விஜய் டிவி களமிறங்கி உள்ளது. இசை அருவி, சன் மியூசிக் போன்ற பல பாட்டு சேனல்கள் இருக்கின்றன.

-விளம்பரம்-

தற்போது விஜய் ஸ்டார் நிறுவனம் இந்த விஜய் மியூசிக்கில் புதிதாக என்ன கொண்டு வந்து மக்கள் மத்தியில் பிரபலமடைய வைக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். விஜய் டிவி ஏற்கனவே சீரியல், படம், நிகழ்ச்சிகளெல்லாம் ஒளிபரப்பி வருகிறது. தற்போது இசையை ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் புதிய களத்தில் இறங்கி உள்ளது. இந்த விஜய் மியூசிக் சேனல் மக்கள் மத்தியில் வெற்றி அடையுமா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.

Advertisement