இந்த பதிவை வைத்து என்ன செய்வது? வெள்ள பாதிப்பு குறித்து விஜய் போட்ட பதிவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
463
- Advertisement -

நடிகர் விஜய் சென்னை மழை வெள்ளம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நேரில் சென்று நிதியுதவி அளித்துள்ளார் பாலா. கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது.இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

-விளம்பரம்-

இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.மேலும், கடந்த இரண்டு நாட்களாக மழை நின்ற நிலையில் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சென்னை மழை வெள்ளம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிக்ஜாம்’ புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

-விளம்பரம்-

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைதளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.  இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.#கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

விஜய்யின் இந்த பதிவிற்கு விஜய் ரசிகர்கள் பயர்விட்டு வந்தாலும் ஒரு சிலர் இந்த பதிவை வைத்து என்ன செய்வது, உங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்யுங்கள் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும், சென்னையில் அங்க அத்தனை அரசு பணியாளர்களும் தன்னார்வலர்களும் இரண்டு நாளா வேலை பாத்துட்டு இருக்காங்க நீ சொகுசா வீட்ல உக்காந்துட்டு ட்வீட் மட்டும் தான் போடுவியா டா பரதேசி அப்படின்னு கேட்பதற்கு எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது… ஓட்டு கேட்டு வந்திராத வக்காளி உன்னை உதைக்காம விடமாட்டேன் என்றும் ஒருவர் பொங்கி இருக்கிறார்.

ஏற்கனவே சென்னையில் ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்யாவசிய பொருட்களை வழங்கி இருந்தனர். மேலும், சென்னையைப் போலவே இந்தப் புயல் காரணமாகச் செங்கல்பட்டு மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேரடியாக புஸ்ஸி ஆனந்த் நிவாரணம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement