என்னை சோகத்தில் ஆழ்த்துவது இது தான்.! வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்.!

0
1333
vijay
- Advertisement -


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் தலைவா படம் முதல் கடைசியாக வெளியான சர்கார் படம் வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அந்த தடைகளை எல்லாம் தகர்த்து அவரது படங்கள் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து தான் வருகிறது.

-விளம்பரம்-

தலைவா படத்தின் போதும் சரி இறுதியாக வெளிவந்த சர்கார் படத்தின் போதும் சரி நடிகர் விஜய்யே தனிப்பட்ட முறையில் போராடி பிரச்சனைகளை சரி செய்துள்ளார். இந்நிலையில் தனது படங்களுக்கு பிரச்சனை வரும் போது விஜய் அதனை எப்படி எதிர்கொள்வார் என்று அருண் ராஜா காமராஜ் மூலமாக நமக்கு தற்போது தெரியவந்துள்ளது.

- Advertisement -

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யிடம், அண்ணா உங்கள் படங்கள் தொடர்ந்து தடைக்குள்ளாகும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று ட்விட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு விஜய், என்னை பற்றியது இல்லை, எல்லா படங்களுக்கு பின் உழைத்த கலைஞர்கள் பற்றிய வருத்தம் தான் எனக்கு அதிகம் என்று பதிலளித்துள்ளார். இந்த உரையாடலை ட்விட்டர் வாசி ஒருவர் தற்போது பகிர அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement