காயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.! வைரலாகும் வீடியோ.!

0
234
Vijay-63

இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, கதிர், இந்துஜா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் நடந்து வருகிறது. அதில் 100 அடி உயரத்திற்கு மேல் பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் லைட் ஒன்று தவறி விழுந்தது.

அந்த விபத்தில் செல்வராஜ் என்னும் எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது செல்வராஜ் நலமாக உள்ளார், அவர் இன்னும் சில நாட்களில் குணமடைந்து விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் செல்வராஜை மருத்துவமனைக்கு சென்று நடிகர் விஜய் பார்த்து நலம் விசாரித்தார்.