சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் ப படங்களில் நடித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இதையும் படியுங்க : தனது காதலரின் பெயரை கையில் ப்ரேஸ்லட்டாக அணிந்த ஜூலி.! எது தான் உண்மை ?
மேலும், கடந்த ஆண்டின் டாப் 30 விரும்பத்தக்க தமிழ் நடிகைகள் பட்டியலில் இவர் தான் முதல் இடம் பிடித்திருந்தார். தற்போது நயன்தாராவிற்கு அடுத்து பட வாய்ப்புகளை அதிகம் வைத்திருப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
சமீப காலமாக அல்டரா மாடர்னாக திரிந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் வித்யாசமான புடைவையில் போஸ் கொடுத்துள்ளார். அதில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு அதற்கு மேல் புடவையை அணித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.