யாருக்கும் தெரியாமல் ரசிகர்களுடன் தனது சூப்பர் ஹிட் படத்தை பார்த்துள்ள விஜய். வைரலாகும் புகைப்படம் இதோ.

0
6798
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்திலிருக்கும் நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். இவருடைய படம் திரையரங்குகளில் வெளியாகப் போகிறது என்றாலே திருவிழா போன்று ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். இவருடைய ஒவ்வொரு படமும் பிரம்மாண்ட அளவில் இருக்கும். உலகம் முழுவதும் தனெக்கென ஒரு ரசிகர் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த பிகில் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-
Kaththi Movie Review {3/5}: Critic Review of Kaththi by Times of India

உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகி கோடிக்கணக்கான அளவில் வசூல் செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். விஜய்யின் புகைப்படம் ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் வந்தாலே போதும் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து விடுவார்கள். இந்நிலையில் இதுவரை யாரும் காணாத விஜய்யின் அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : அட, சுனைனாவா இது. என்ன இப்படி பப்லியா இருக்காரு. அவரே வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

ஆமாங்க, தளபதி விஜயின் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் கத்தி. இந்த படத்தில் விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்தார். சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இந்த படம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் கத்தி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தளபதி விஜய் அவர்கள் காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து உள்ளார். இது ரசிகர்களுக்கு தெரியாதாம். அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் முகமூடி அணிந்தபடி விஜய் சென்றுள்ளார்.

-விளம்பரம்-

அப்போது விஜய் அவர்கள் தன் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் அனைவரும் டரெண்டிங் செய்து வருகிறார்கள். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

இதையும் பாருங்க : தனது பெயரில் இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ. போலீசில் புகார் அளித்த சீரியல் நடிகை.

இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. கொரோனா காரணமாக இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Advertisement