சூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சன் வரிசையில் விஜய்க்கு வைக்கபட்ட மெழுகு சிலை. எங்கு தெரியுமா ?

0
1492
Vijay

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளா முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது படங்கள் வெளியானாலே இவரது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான விஷயம் தான். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. பிகில் திரைப்படத்தினால் விஜய் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார் விஜய்.

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் என்பதால் எந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க விஜய் ரசிங்கர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையும் பாருங்க : வாய திறந்தாலே பொய். மீரா மிதுன் ஊழல் தடுப்பு அதிகாரியா ? இந்த ஆதரங்களை பாருங்க.

- Advertisement -

அது என்னவெனில் கன்னியாகுமரியில் இருக்கும் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இளையதளபதி விஜயின் மெழுகு சிலை சமீபத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே இந்தி நடிகர் ஷாருக்கான், மகாத்மாகாந்தி, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான், இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் , இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்திய பிரதமர் மோடி போன்ற பல்வேறு பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

View this post on Instagram

#Vijay Wax Statue in Kanyakumari Wax Museum

A post shared by Behind Talkies (@behindtalkies) on

தற்போது இவர்கள் வரிசையில் நடிகர் விஜய்யின் மெழுகு சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய்க்கு சிலையை காண தினமும் பல்வேறு நபர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று அங்கே புகைப்படங்களை எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இந்த அருங்காட்சியில் அமைக்கபட்டிருக்கும் விஜய்யின் மெழுகு சிலை புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பலரும் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement