விஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.!

0
1479
- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவி தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

Ajith and shalini

- Advertisement -

பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலைஞரின் உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், கௌண்டமணி உள்ளிட்ட பல நடிகர்களும் கலைஞர் அவர்களின் உடலுக்கு நேரில் சென்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.

தமிழ் சினிமாவின் பல முக்கிய நடிகர்கள் சென்ன்றுவிட்ட நிலையில் நடிகர் விஜய் மட்டும் இன்னும் இறுதி மரியாதையில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருக்கிறார். தற்போது நடிகர் விஜய் ‘சர்கார் ‘ படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கிறார். அதனால், முதற்கட்டமாக கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதையை செலுத்தும் வகையில் “சர்கார் ” படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் விஜய் குடும்பத்தின் சார்பாக நடிகை விஜய் அவர்களின் மனைவி சங்கீதா அவர்கள் கலைஞர் அவர்களின் உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

sangeetha

தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஜய் சென்னை வந்தடைய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்குகொள்வாரா இல்லையா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இதுவரை விஜய் சென்னை புறப்பட்டாரா, இல்லையா என்று எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, விஜய் சென்னை வர தமதமாகும் வாய்ப்புள்ளதால் நடிகர் விஜய்க்கு முன்பாகவே சங்கீதா அவர்கள் கலைஞர் அவர்களின் இறுதி மரியாதையில் கலந்து கொண்டுள்ளாரா என்ற எண்ணம் தோன்றுகிறது.

Advertisement