அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

0
1120
Stakin
- Advertisement -

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுல்லது. அவரது மறைவையொட்டி இன்று ஒரு நாள் அரசு விடுமுறையும், 7 நாள் துக்க அனுசரிக்கபடும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

தற்போது ராஜாஜி மண்டபத்தில் கலைஞர் அவர்களின் உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். மேலும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கலைஞர் அவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர் நீதி மாற்றம் அறிவித்திருந்தது.

இதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் கலைஞர் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும், சமீபத்தில் இதுகுறித்து பேசிய கலைஞர் அவர்களின் மகன் ஸ்டாலின் தெரிவிக்கையில், ராஜாஜி மண்டபத்தில் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு அமைதியாக செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement