நடிகரின் திருமணத்திற்கு சென்று விஜய் செய்துள்ள செயல் – திட்டியுள்ள விஜய்யின் மனைவி.

0
66237
vijay-sangeetha
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-
 vijay in shanthanu wedding

- Advertisement -

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. விஜய் விஜயை போலவே தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொணடவர் நடிகர் சாந்தனு.

பிரபல இயக்குனர் பாக்கியராஜின் மகனான சாந்தனு சிறு வயதில் தனது தந்தையின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும், இவர் தீவிர விஜய் ரசிகர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். தற்போது சாந்தனு விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சாந்தனு பிரபல தொகுப்பாளினியாக கிகியை கடந்த ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-

வீடியோவில் 15 : 10 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தனு தனது திருமணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். அதில், என்னுடைய திருமணத்திற்கு விஜய் அண்ணா தான் தாலி எடுத்து கொடுத்தார். பின்னர் விஜய் அண்ணா வீட்டிற்கு சென்று இதை அவரது மனைவியிடம் சொல்லி உள்ளார். அதற்கு அவர், ஏன் இப்படி பண்ண இதெல்லாம் பெரியவங்க தான பண்ணணும் திட்டராபா என்று விஜய் அண்ணா என்கிட்டே சொன்னாரு. அதற்கு நான், யார் பன்றாங்க என்றதோடு நம்ம மனசுக்கு புடிச்சவங்க செய்றது தான் முக்கியம் என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.

Advertisement