இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் தளபதி விஜயை வைத்து படம் இயக்குவது குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ் தான் பயங்கர ட்ரெண்டிங்காக உள்ளது.
சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் முதன் முதலாக ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். பின் படங்களை இயக்கும் இயக்குனராக மாறியவர். மேலும்,இவர் இயக்குனராக வருவதற்கு முன்னர் பல விளம்பரங்களை இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் ‘மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் போன்று பல படங்களை இயக்கி உள்ளார்.
மேலும், இவருடைய படங்கள் எல்லாம் பெரிய அளவு பட்ஜெட் படங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் சினிமா உலகில் பல முக்கிய இயக்குனர்கள் படங்களில் நடித்து உள்ளார். ஆனால்,இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் மட்டும் நடித்தது இல்லை. இதை தொடர்ந்து கௌதம் மேனன் கூட்டணியில் விஜய் அவர்கள் யோஹன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும், அதற்கான பூஜையும் போட்டார்கள். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் பூஜையுடன் நின்று விட்டது. இதைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் விஜயை வைத்து படம் இயக்குவது குறித்து கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு கௌதம் மேனன் அவர்கள் கூறியது, எனக்கும் தளபதி விஜயை வைத்து படம் இயக்குவதில் ஆசையாகத் தான் இருக்கிறது.
மேலும், அவரை வைத்து ஒரு பெரிய படம் பண்ண வேண்டும். ஆனால், நான் அதற்காக அதிக செலவு எல்லாம் வைக்க மாட்டேன். மேலும், நான் அவருடைய படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவருடைய படங்கள் எல்லாம் வேற லெவல்ல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான பிகில் படம் கூட வேற லெவல்ல தெறிக்க விட்டது என்றும் சொல்லலாம். இதை எல்லாம் விட ஒரு ரசிகனாக தளபதி விஜயை ரொம்ப பிடிக்கும். என்கிட்ட ஒரு கதை கூட இருக்கிறது. அந்த கதைக்கு தளபதி விஜய் அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும்.
மேலும், அவரை வைத்து ஒரு கதை எழுதினால் அது சரியா வருமான்னு தெரியல? ஆனா, நான் எழுதின கதை அவருக்கு கரெக்ட்டா இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும், அது தப்பா போகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு. பெரிய செலவு பண்ணி நான் படம் எடுக்க மாட்டேன். அவருடைய படங்கள் எல்லாம் 80– 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் இருக்கு(அட்லீயை குறிப்பிடுகிறாரோ). ஆனால் ,அந்த படங்கள் எல்லாம் நான் வெறும் 30 கோடி ரூபாயில் என்னால் பண்ண முடியும். என் மீது நம்பிக்கை வைத்து அவர் நடிக்க ஓகே சொன்னால் அன்னைக்கு தான் எனக்கு தீபாவளி என மனம் திறந்து பேசினார் கௌதம் மேனன்.