இந்த பிரபல நடிகருடன் நடித்ததால் தான் விஜய் வெளியே தெரிந்தார் ! சந்திரசேகர் ஓபன் டாக்

0
984
Sa-Santhirasekar

விஜயின் ஆரம்பகால படங்கள் பற்றி அவரது தந்தையான எஸ்.ஏ.சி யே ஒரு பொது மேடையில் விமர்சித்துள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை அளித்துள்ளது.தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித் தான்.

vijaykanth

ஆனால் தற்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் அவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகபடுத்தியது அவரது தந்தை தான். மேலும் அவரது தந்தை கேப்டன் விஜயகாந்தை வைத்து பல ஹிட் படங்களையும் இயகியுள்ளர்.அதில் விஜயும் சில படங்களில் விஜயகாந்த்துடன் சேர்ந்து நடித்துள்ளார்.சமீப்பத்தில் விஜயகாந்த் தின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை சிறப்பித்து போற்றும் வகையில் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது.

இந்த விழாவில் பல்வேறு இயக்குனர்களும் ,நடிகர்,நடிகைகளும் பங்கேற்றனர்.மேலும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய எஸ். ஏ. சி விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு படத்தை எடுத்தேன்.ஆனால் அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது, அதன் பிறகு விஜய் நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை, பிறகு விஜயகாந்துடன் அவர் நடிக்க வைத்த பிறகு தான் கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பித்தார் என்று விஜயயை சற்று தாழ்த்தி பேசியுள்ளார். இதனால் விஜயின் ரசிகர்கள் அவரின் தந்தை மீது கடும் கோவத்தில் உள்ளனர்.