விஜயகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல் : சினிமாவில் நடிக்க கேப்டன் நடத்திய முதல் போட்டோ ஷூட் இதான்.

0
2397
Vijayakanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான, முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த் இன்று (ஆகஸ்ட் 25) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். ரஜினி மற்றும் கமல் என்ற மாபெரும் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செய்த காலத்தில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த்.ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் அதன் பின்னர் ரஜினி கமலுக்கு இணையாக ஒரு ஹீரோவாக வலம் வந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-63.jpg

விஜயகாந்த ஆரம்பத்தில் வில்லனாக தான் அறிமுகமானார். இவர் 1979 ஆம் ஆண்டு. ஏ காஜா என்பவர் இயக்கிய படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு செல்வராஜ் இயக்கத்தில் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விஜயகாந்த் காலத்தில் தான் கருப்பான நடிகர்கள் பலர் மக்கள் மத்தியில் விரும்பப்பட்டனர்.

- Advertisement -

அகல் விளக்கு படத்திற்கு பின்னர் விஜயகாந்த் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த நிலையில் விஜயகாந்த் சினிமாவில் வரும் போது எடுத்த முதல் டெஸ்ட் ஷூட்டின் புகைப்படங்கள் சில விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜ் தான்.

This image has an empty alt attribute; its file name is 2-16.jpg

விஜயராஜ் என்ற இவரின் பெயரில் ராஜ் என்பதை நீக்கிவிட்டு காந்த் என்பதை சேர்த்து இவரை நடிகராக அறிமுகப்படுத்திய காஜா தான். அதன் பின்னர் இவருக்கு கேப்டன் என்ற அந்தஸ்தை கொடுத்தது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான். 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை படத்தை ஆர் கே செல்வமணி இயக்கி இருந்தார் என்பது குறிப்பித்தக்கது.

-விளம்பரம்-
Advertisement