ச்ச,எப்படி இருந்த மனுஷன் – மருத்துவமனையில் இருக்கும் கேப்டனின் பழைய வீடியோவை பகிரும் ரசிகர்கள்.

0
519
- Advertisement -

கேப்டனின் பழைய உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

- Advertisement -

இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர் என்றே சொல்லலாம். இவரை தேடி யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அன்போடு அனுசரிப்பார். தன்னால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்வார்.

இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலே போயிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கமே கடனில் மூழ்கியிருந்தபோது கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து பல உதவிகளை செய்திருக்கிறார். இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது தொடர் சிகிச்சை எல்லோரும் விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று வருகிறார் அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியா மருத்துவமனையில் விஜயகாந்த்திற்கு 5வதுநாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த்தின் பழைய உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட பலர் எப்படி இருந்த மனுஷன் என்று மனமுடைந்து போய் கமண்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement