‘கேப்டன் கேப்டன்’ என்று விஜயகாந்த் வீட்டு கிளி பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்து இருக்கிறது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை கலை நிகழ்ச்சிகள் மூலம் நடத்தி நடத்தி அடைத்து இருந்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்திருந்தார்.
இதையும் பாருங்க : எங்க அப்பா சொன்னது பொய்யா, என்னடா தெரியும் உனக்கு – மேடையில் பாய்ந்த தேவரின் மகன். வைரலாகும் வீடியோ.
விஜயகாந்த் குறித்த தகவல்:
மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். ஆனால், சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களிலும், அரசியலிலும் ஈடுபட முடியாமல் போனது.
விஜயகாந்த் மகன்கள்:
தற்போது கட்சியை இவரின் குடும்பம் தான் பார்த்து கொண்டு வருகிறது. மேலும், இவரின் மகன் சண்முக பாண்டியன் தன் தந்தையை போல சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் விடாமுயற்சியில் நடித்து வருகிறார். தற்போது இவர் சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் குற்ற பரம்பரை படத்தில் பிசியாக நடிக்கிறார். அதே போல் விஜயகாந்தின் இன்னொரு மகன் விஜய பிரபாகரன் தன் தந்தையை போல அரசியலில் இறங்கி இருக்கிறார்.
விஜய பிரபாகரன் குறித்த தகவல்:
விஜயகாந்துக்கு பின்னர் இவர் தான் அந்த கட்சியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கூட இவர் வெள்ளை உடையில் தனது கட்சிக்காக அக்மார்க் அரசியல்வாதியாக பறந்து பறந்து பிரச்சாரம் செய்து இருந்தார். இந்நிலையில் பிரபாகரனின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபாகரன் அவர்களுக்கு வீட்டு விலங்குகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் உடையவர்.
விஜய பிரபாகரன் வளர்க்கும் கிளி:
அந்த வகையில் இவர் நாய் போன்ற பல உயிரினங்களை வளர்த்து வருகிறார். தற்போது அவர் கிளியையும் வளர்த்து வருகிறார். அந்த கிளி கேப்டன் கேப்டன் என்று அழகாக கூப்பிடுகிறது. அதனால் அந்த கிளிக்கு கேப்டன் என்று பெயர் வைத்திருக்கிறார். தற்போது தன்னுடைய வீட்டு விலங்குகளை குறித்து விஜய பிரபாகரன் அளித்த பேட்டி வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.