சிகிச்சைக்கு பணம் கொடுத்துவிட்டு படுக்கைக்கு அழைத்த நடிகர்.! விஜயலக்ஷ்மி போலீசில் புகார்.!

0
2265

நடிகை விஜயலட்சுமி ‘பிரன்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். 

பிரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் பூந்தோட்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி என்ற படங்களில் நடித்தார். கடைசியாக 2010ல் வந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’படத்தில் ஆர்யாவிற்கு அண்ணியாக நடித்தருப்பர் விஜயலட்சுமி.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் கூட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார் விஜயலக்ஷ்மி. இந்த நிலையில் இவர் தற்பொழுது உயர் ரத்த அழுத்தம் காரணமாக தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இருந்த பணத்தை அம்மாவின் மருத்துவ செலவிற்காக செலவாகிவிட்டர்த்து அதனால் சினிமா துறையினர் உதவவேண்டும் என அவர் சகோதரி கேட்டுள்ளார்.

இதனால் பல்வேறு நடிகர்கள் விஜயலட்சுமியை சந்தித்து உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்று, விஜயலட்சுமியிடம் நலம் விசாரித்துவிட்டு, ரூ.1 லட்சம் உதவி செய்தார் கன்னட நடிகர் ரவி பிரகாஷ் . ஆனால், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் விஜயலக்ஷ்மி.

-விளம்பரம்-

அதில் ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை சந்திக்க கடந்த மாதம் 27- ஆம் தேதி நடிகர் ரவி பிரகாஷ் வந்தார். அப்போது எனக்கு ரூ.1 லட்சம் கொடுத்தார். அதன்பிறகுஎனது செல்போனுக்கு தொடர்ந்து மெசேஜ்அனுப்பியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று கூறியிருந்தார். ஆனால், விஜயலட்சுமியின் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளார் நடிகர் ரவி பிரகாஷ்.

Advertisement