மோசடி வழக்கில் கைது, ஜாமீனில் வெளியில் வந்த ஜெயலட்சுமியை சால்வை அனுவித்து வரவேற்ற பா.ஜ.கவினர். கலங்கிய ஜெயலட்சுமி

0
160
Jayalakshmi
- Advertisement -

சினேகன் பவுண்டேஷன் சர்ச்சை தொடர்பாக நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சினேகன்-ஜெயலட்சுமி விவகாரம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தன்னுடைய பெயரை சொல்லி மோசடி நடப்பதாக சினேகன் அவர்கள் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்து இருந்தார். சினேகன் 2015 ஆம் ஆண்டில் இருந்து சினேகம் பவுண்டேஷன் நடத்தி வருகிறார். இது அவரின் சொந்தப் பணத்தின் மூலம் உருவாக்கியது. இதன் மூலம் இவர் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

-விளம்பரம்-

அதற்கு இவர் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும், அதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்வதாக நடிகை ஜெயலட்சுமி மீது கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் சினேகன். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி கூறியது, நான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலில் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். அதன் மூலம் மக்களுக்கு உணவு, உடை உட்பட பல்வேறு சேவைகளை செய்து இருக்கிறேன்.

- Advertisement -

ஜெயலட்சுமி அளித்த புகார்:

கொரோனா காலத்திலும் மக்களுக்கு என்னுடைய சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால், அவர் பெயரை நான் தவறாக பயன்படுத்தி பணம் பறிப்பதாக சினேகன் புகார் அளித்திருக்கிறார். இது முற்றிலும் பொய். என் பெயரை களங்கப்படுத்துவதற்காக அவர் இந்தக் குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை :

இப்படி இருவரும் மாறி மாறி புகார் அளித்தும், பேட்டி கொடுத்தும் இருந்தார்கள். இதன் பின் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தது. அதன் பின் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால், சிநேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின் தன்னை கைது செய்யக்கூடாது என்று சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

-விளம்பரம்-

ஜெயலட்சுமி கைது:

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சினேகனுக்கு முன்ஜாமின் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் மோசடி மற்றும் போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்துஇருந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் வைரலானது

ஜெயலட்சுமி வீடியோ:

அதில் ஜெயலக்ஷ்மி, எல்லா போலீசும் என்னுடைய வீட்டில் சோதனை நடத்தினீர்கள். என்ன கிடைத்தது? எனக்கு எதிராக ஒரு சின்ன ஆதாரம் ஆவது கிடைத்ததா? போலியான ஆவணங்களை பயன்படுத்தி நான் பணம் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் எந்த தவறும் செய்யவில்லை. அதற்கு பிறகு எதற்கு என் மீது விசாரணை நடத்த வேண்டும். இருந்தாலும் விசாரணைக்கு நான் வருகிறேன். ஆனால், என்னுடைய வண்டியில் தான் நான் வருவேன். நீங்கள் நடந்து கொள்வது சரியில்லை என்று ஆவேசமாக பேசி இருந்தார். பின் ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்தனர். இப்படி ஒரு நிலையில் சிறைக்கு சென்ற இரு தினங்களில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார் ஜெயலட்சுமி. வெளியே வந்த அவரை கட்சியை சேர்ந்த சிலர் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது விஜயலக்ஷ்மி எமோஷனல் ஆகி கண் கலங்கினார்.

Advertisement