அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அதே போல சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் “நோட்டா “என்ற தமிழ் படத்தில் நடித்து உள்ளார்.
விஜய் தேவர்கொண்டா அவர்கள் சினிமா உலகிற்கு வந்த குறுகிய நாளிலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். மேலும், பிரபல பத்திரிகை நிறுவனமானன போர்ப்ஸ் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் சாதனையாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஃபைட்டர் என்ற படத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.
இதையும் பாருங்க : சமையல்காரர் வராததால் வீட்டில் சமைத்த மணிமேகலை,வெடித்த குக்கர். வைரலான வீடியோ.
தற்போது இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் லவ்வர் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ள இவருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டாவும் இந்த படத்தில் நடித்த ரஷி கண்ணா மற்றும் இசபெல் லெய்ட்டி கலந்து கொண்டனர்.
இந்தப் பேட்டியின் போது ரஷி கண்ணா ஒருவேளை மருத்துவரை டேட்டிங் செய்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார்.அப்போது குறுக்கிட்டு பேசிய விஜய் தேவர் கொண்டா டாக்டரை நீங்கள் டேட் செய்தால் அவர் உங்களது கண்ணங்களை கணங்களாக பார்க்கமாட்டார். அதற்கு மாறாக அவர் அதனை ஒரு மருத்துவ ரீதியாக தான் பார்ப்பார். மேலும், அவர் உங்களுடைய மார்பை மார்பாக பார்ப்பதற்கு பதிலாக அப்பர் தொராக்ஸ்(மேல் தோராக்ஸ் ) என்றுதான் கூறுவார் என்று பேசியுள்ளார். இந்த குறிப்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், மூன்று பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் விஜய் தேவர்கொண்டா இப்படி பேசியுள்ளது பார்ப்பவர்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட வீடியோவை ட்விட்டர் வாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் விஜய் தேவர்கொண்டாவை டேகும் செய்திருக்கிறார், அதில் உங்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்,அதனால் பேசுவதற்கு முன்பாக கொஞ்சம் யோசித்து பேசுங்கள் உங்களுக்கு பொறுப்பும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்