சர்வதேச பிரபலத்தை ஈர்த்த வாத்தி கம்மிங் பாடல் – செம மாஸ் பண்ணிட்டாரு தளபதி.

0
5293
master
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

-விளம்பரம்-

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’-யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சமீபத்தில், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார் சர்வதேச பிரபலம் ஒருவர்.

Image

அது வேறு யாரும் இல்லை விஜய்க்கு மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பட்டத்தை அளித்த Iara குழுவை சார்ந்த ஆடம் மோர்லே (Adam Morley) என்பவர் தான். இவர் உலக அளவில் சாதனை நிகழ்த்தும் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கும் IARA விருதுகள் வழங்கும் நிறுவனத்தின் அம்பாசிடராக உள்ளார் பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement